மின்சாரம் பாய்ந்து தூய்மைப்பணியாளர் உயிரிழப்பு

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-02-06 18:01 IST

சென்னை,

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு இன்று தூய்மைப்பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில் பட்டாபிராமன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பட்டாபிராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்