பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது

வீட்டில் தனியாக இருந்தபோது மாணவிக்கு, தாயின் இரண்டாவது கணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;

Update:2025-07-19 14:05 IST

கோப்புப்படம் 

மதுரை மாநகர பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, தனக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள அதிகாரிகள், அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவியின் தந்தை இறந்து விட்டதால், அவரது தாயார், 47 வயதானவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது, தாயின் இரண்டாவது கணவர் அந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்