தமிழக கடலோரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை
நாகை மாவட்டத்தில் நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் கடற்பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.;
சென்னை,
கடல் வழியாக பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவுவதை தடுக்கும் விதமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 'சாகர் கவாச்' எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியோர் இணைந்து இந்த ஒத்திகையை மேற்கொண்டனர்.
இதன்படி நாகை மாவட்டத்தில் நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் கடற்பகுதிகளில் 'சாகர் கவாச்' ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் போல் ஊடுருவ முயன்றவர்களை கைது செய்து ஒத்திகையில் நடத்தினர். கடலூரில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில், கடலூர் துறைமுகத்தை தகர்க்க போலி வெடிகுண்டுகளுடன் வந்த 5 பேரை வீரர்கள் கைது ஒத்திகை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 'சாகர் கவாச்' ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் மீனவர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கினர்.