விஜய்க்கு பாதுகாப்பு; அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை - குஷ்பு கருத்து

விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை என குஷ்பு தெரிவித்துள்ளார்.;

Update:2025-02-15 21:06 IST

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'ஒய்' பிரிவு பாதுகாப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை என நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சினிமா துறையில் விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பு தேவை இருக்கிறது. தற்போது அவர் அரசியலில் இருப்பதால் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை."

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்