சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-05-26 11:26 IST

சென்னை,

பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து, பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது.

அதாவது, சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநகராட்சி துணை ஆணையர், மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, தலைமைப் பொறியாளர் இடம் பெற்றுள்ளனர்.

 

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்