சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழா: ஊஞ்சலூரில் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தம்

4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.;

Update:2025-11-11 13:57 IST

சென்னை,

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் சேஷாத்திரி சுவாமிகள் அதிஷ்டானம் 97-வது ஆராதனை விழா நடைபெற இருப்பதையொட்டி, 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடலூர் துறைமுகம் - மைசூரு எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ், திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஜனவரி 5-ந் தேதி முதல் ஜனவரி 12-ந் தேதி வரை ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்