குடும்ப பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த கருப்பசாமிக்கு குடும்பப் பிரச்சினை இருந்ததாம்.;

Update:2025-06-01 13:49 IST

தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு குடும்பப் பிரச்சினை இருந்ததாம். இந்த நிலையில் மருத்துவ விடுப்பிலிருந்த அவர், மே 22-ம்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மே 29-ம்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்