சென்னையில் நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்;

Update:2025-09-19 17:54 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-126க்குட்பட்ட மந்தைவெளி, ஜெத் நகரில் உள்ள ஸ்ரீமதி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (20.09.2025) நடைபெறவுள்ளது.

இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்