சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (18.09.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (18.09.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-18ல் எஸ்.ஆர்.எப். வித்யாலயா பள்ளி மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-36ல் எத்திராஜ் சாமி சாலையில் உள்ள டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-61ல் எழும்பூர், வானல்ஸ் சாலையில் உள்ள சிராஜ் மஹால், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-66ல் காமராஜர் திருமண மண்டபம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-81ல் பழைய பரோடா வங்கி தெருவில் உள்ள எஸ்.எம்.கே. திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-97ல் அயனாவரம், வெள்ளாள தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-114ல் சேப்பாக்கம், சி.என்.கே. சாலையில் உள்ள தனியார் மைதானம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-139ல் ஜாபர்கான்பேட்டை, ஆர்.ஆர். காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள விளையாட்டு திடல், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-165ல் வானுவம்பேட்டை, பழண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ஶ்ரீபழண்டியம்மன் திருமண மண்டபம், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-195ல் துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எலிம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.