பச்சிளம் குழந்தையை கவ்வி சென்ற தெருநாய்... அரியலூரில் பரபரப்பு

குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.;

Update:2025-07-04 10:23 IST

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ். மாத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்துள்ளது. இதனை மோப்பம் பிடித்த தெருநாய் ஒன்று அந்த குழந்தையின் உடலை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த நாயை விரட்டினர். அதனைத்தொடர்ந்து அந்த நாய் குழந்தையின் உடலை கீழே போட்டு விட்டு ஓடியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் குவாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த குழந்தை யாருடையது?. இறந்து பிறந்ததா?, கள்ளத்தொடர்பால் பிறந்ததா? அல்லது அந்த குழந்தையை கொலை செய்து குப்பை மேட்டில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்