தோப்புக்கு அழைத்துச் சென்று மாணவி பலாத்காரம்.. தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-09-05 03:50 IST

குளச்சல்,

பாலப்பள்ளம் நீர்வக்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஸ்(வயது 25). தனிசுக்கு திருமணம் ஆகி மனைவியும், 10 மாத குழந்தையும் உள்ளனர். இவருக்கு குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ்-2 படித்து வரும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் மாணவியை தனிஸ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று ஒரு தோப்பில் வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர் வீடு திரும்பிய மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கண்ட தாயார், இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது மாணவி கூறியதை கேட்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே தனிஸ் தலைமறைவானார்.

பின்னர், இதுபற்றி அனைத்து குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தனிசை தேடி வந்தார். இந்த நிலையில் போலீசார் நேற்று தனிசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்