டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு; அமைச்சர் எ.வ.வேலு

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது;

Update:2025-04-23 12:03 IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது பேசிய காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வயல்வெளி பகுதியில் சேரும் சகதியாக இருப்பதால் சாலைகள் கூடுதல் தரமாக அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மண் தரத்தை சாலைகள் காலம் அமைப்பும், மண் தரம் சரியில்லை என்றால் சாலைகள் விரைவில் சேதமடையும்.

காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புது சாலைகள் அமைக்கப்படுவதை 3 ஆண்டுகளாக குறைக்க ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் சாலைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்' என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்