நாகையில் திடீர் கனமழை: தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

சுமார் 200 ஏக்கருக்கு மேல் தாளடி பருவ சாகுபடிக்காக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.;

Update:2025-11-20 19:47 IST

நாகை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், சுமார் 200 ஏக்கருக்கு மேல் தாளடி பருவ சாகுபடிக்காக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதனால் பாலையூர், செல்லூர், வடகுடி, நாகை கோகூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செலவு செய்துள்ள நிலையில், நீரில் மூழ்கிய விளைநிலங்களை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்