புழல் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் தமிழ், ஆங்கில இலக்கிய மன்றங்கள் தொடக்கம்

விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.;

Update:2025-10-10 17:28 IST

சென்னையை அடுத்த புழலில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஜ ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.செல்வகுமார், செயலாளர் டாக்டர் சி.ஆறுமுகசாமி, துணை தலைவர் ஏ.சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் இலக்கிய மன்றத்தை

சென்னை முருகன் மருத்துவமனை முதன்மை இயக்குநர் டாக்டர் நிருபா அருணும், ஆங்கில இலக்கிய மன்றத்தை டாக்டர் அருணும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.

விழாவில், சங்க நிர்வாகிகள் எம்.சுந்தர், ஏ.பழனிசாமி உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்