தமிழக சட்டசபை தேர்தல்; தே.மு.தி.க. கூட்டணி குறித்து எப்போது முடிவு? பிரேமலதா பதில்

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும்.;

Update:2025-12-02 09:25 IST

ஈரோடு,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற புரட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறும்போது, வருகிற சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கெல்லாம் கூட்டணி தொடர்பாக யாரோ ஒருவர் சொன்னதை நம்பி நான் பதில் கூற மாட்டேன். இன்றைக்கும் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சி தான்.

அனைத்து கட்சிகளுடன் நாங்கள் நட்புடனே பழகி வருகிறோம். கூட்டணி குறித்து ஜனவரி 9-ந்தேதி தே.மு.தி.க. முடிவு செய்யும் என்றார். இதேபோன்று, நம்பியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், நம்பியூரில் மக்களை தேடி தலைவரின் மக்கள் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரதயாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. அதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

மக்கள் விரும்பும் கூட்டணி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும். நாம் யாருடன் கூட்டணி வைக்கிறோமோ, அவர்கள்தான் இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்கள். மந்திரி சபை அமைந்து தே.மு.தி.க.வும் அந்த மந்திரி சபையில் இடம்பெறும். நல்ல கட்சிக்கு நல்லவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளன. தே.மு.தி.க. தொண்டர்களை அரசாங்க பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை என்றும் அப்போது அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்