தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் டெல்லி பயணம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;

Update:2025-09-09 14:42 IST

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இடம்பெற்றிருந்தது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் சமீபத்தில் அறிவித்தார். முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர் செல்வமும் விலகினார். இதனால் பாஜக கூட்டணியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். அவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் நிலவி வரும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்