தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது; மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
வாக்குகள், மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் முறையாக அறிவிக்கப்படுவார்கள்.;
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பிரிவான தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.யின் தலைவர் உள்பட அனைத்து நிர்வாகிகளின் தேர்தல், சென்னை ஐகோர்ட்டின் நீதி அரசர்கள் எஸ்.எம், சுப்பிரமணியன் மற்றும் முகமது ஷாக்பி ஆகியோர் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 16-11-2025 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறுகிறது. திருப்போரூர் எல்.எம்.எம். திருமணம் மண்டபத்தில் தேர்தல் அதிகாரிகளான ஐ.என்.டி.யு.சி. மூத்த உறுப்பினர்கள் ஏ. கல்யாண்ராமன், எஸ். லிங்க மூர்த்தி, எம். ஆறுமுகம், எம். நந்தகுமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி 5.11.2025 அன்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. சட்ட விதிப்படி 21 நிர்வாகிகளும், 30 செயற்குழு உறுப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். சென்னை மயிலாப்பூர் பாலசுப்பிரமணியன் தெருவிலுள்ள அம்பலவாணன் மினி ஹாலில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு எம்.பன்னீர்செல்வம், எம்.நடராஜனும், செகரட்ரி ஜெனரல் பதவிக்கு கோவை செல்வம், கே. குணசேகரனும், பொருளாளர் பதவிக்கு வாழப்பாடி ராம. கர்ணன், இ. பரமானந்தமும், மூத்த துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.குமார், என்.கே.நாராயணசாமி, என் கண்ணன் எம்.ஜெ.ராஜ்குமார், அமானுல்லாகான், துணை தலைவர் பதவிக்கு ஜி.ஜெயபால், டி.ராஜசேகரன், பி.பாலசுப்ரமணியம், ஏ. முருகேசன், அரியலூர் தமிழ்மணி, பொள்ளாச்சி வி.ஜெபராஜ் ராஜேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
பொதுச்செயலாளர்கள் பதவிக்கு ஆர்.லலிதா சுந்தரமகாலிங்கம், ஜி. சரவணன், வழக்கறிஞர் எம்.ராஜேஷ்வரி, பி. வெங்கடேஷ், யு. கருப்பையா, போக்குவரத்து வி. முனுசாமி, சி.நந்தகோபால் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு எம்.ஜோசப் ஜெரால்ட், என். சங்கர், இ.ரவிக்குமார், சங்கர் சம்பந்தன், தவுலத் கான், ஏ.ராம்குமார், எஸ், ஷோபன் லோகேஸ்வரன் ஆகியோரும் மேலும் 30 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடத்தும் கண்காணிப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், இந்திய தேசிய போக்குவரத்து சம்மேளத்தின் தலைவரும் கடலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் மற்றும் வருவாய் துறை அதிகாரி (டி.ஆர், ஓ.) ஓய்வு, எஸ். சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
இதன்பின் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் முறையாக அறிவிக்கப்படுவார்கள். மொத்த வாக்காளர்கள் 1,750 பேர். மூத்த உறுப்பினர்கள் வாழப்பாடி இராம சுகந்தன், இராம. கர்ணன், தலைவர் பதவிக்கு போட்டியிடும் மு. பன்னீர்செல்வம், இ. ரவிக்குமார், ஜெயபால், விருகை கண்ணன், அவளூர் ஜி.சீனிவாசன் உள்ளிட்டோர் வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.