‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குற்றச்செயல்களுக்கு எதிரான விரைவான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-15 17:49 IST

சென்னை,

குற்றச்செயல்களுக்கு எதிரான விரைவான, கடுமையான நடவடிக்கை மற்றும் குறைந்து வரும் குற்ற விகிதங்கள் ஆகியவை காரணமாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையை முதல்-அமைச்சர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

“பெண்களுக்கான கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது என்பதை அமைச்சர் கீதாஜீவன் விளக்கமாக கூறியுள்ளார்.

குற்றச்செயல்களுக்கு எதிரான விரைவான, கடுமையான நடவடிக்கை மற்றும் குறைந்து வரும் குற்ற விகிதங்கள் ஆகியவை காரணமாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது.

விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த கட்டுரை இந்த சுதந்திர தினத்தில் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.”

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்