தொழில்நுட்பக் கோளாறு: வாட்ஸ் அப் டிக்கெட் சேவை பாதிப்பு - மெட்ரோ நிர்வாகம் தகவல்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக CMRL WhatsApp டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை. பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெறுமாறு பயணிகளைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.