அது மட்டுமே மாறி இருக்கிறது; வேறு எதுவும் மாறவில்லை: கமல்ஹாசன்

தமிழகம் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.;

Update:2025-11-16 09:27 IST

மதுரை,

கொடைக்கானல் செல்வதற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பீகாரில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். தமிழகம் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மேகதாது அணை விவகாரம், என்னுடைய சிறு வயதில் இருந்தே நடந்து வருகிறது.

எனது தாடியின் நிறம்தான் மாறி இருக்கிறது. வேறு எதுவும் மாறவில்லை. புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க.வை எதிரி என்று கூறி வருகிறார்கள். யாராக இருந்தாலும், இலக்கை உயர்வாக வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் அப்படி கூறலாம்.

உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன்னால், இருப்பதிலேயே சிறந்த நடிகர் போல எனது பிள்ளை வரவேண்டும் என்று நினைப்பார்கள். ஏழையாக இருப்பவர்கள் கூட தனது பிள்ளையை கொஞ்சும்போது, மகராசன் என்றுதான் கொஞ்சுவார்கள். இது எல்லோருக்கும் இருக்கும் ஆசைதான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்