அடிக்கடி தனிமையில் சந்தித்து தோழியுடன் உல்லாசம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்

வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு என் பொண்டாட்டிதான் என அந்த வாலிபர் ‘ரீல்ஸ்’ வெளியிட்டிருந்தார்.;

Update:2026-01-17 10:25 IST

பல்லாவரம்,

சென்னையில் திரிசூலம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வக்குமார் (வயது 22). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரீனா(24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்யாமலேயே திரிசூலம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து, கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் ரீனாவின் தோழியான ரஜிதா (25) என்பவருடன் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடனும் அடிக்கடி ரகசியமாக தனிமையில் இருந்து வந்தார். இந்த விவகாரம் தோழிகளான ரீனா மற்றும் ரஜிதாவுக்கு தெரியவந்தது. இதனால் இருவரும் செல்வக்குமாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜிதா மற்றும் ரீனாவுக்கு 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் சில ஆண்களுடன் ஒன்றாக ஒரே அறையில் மதுப்பழக்கம், உல்லாசம் என ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இதையறிந்த செல்வக்குமார் தனது கள்ளக்காதலிகள் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்ததுடன், அவர்களுடன் தகராறு செய்தார். இதனால் ரீனா, ரஜிதா இருவரும் செல்வக்குமாரை, திரிசூலத்தில் உள்ள பூங்காவுக்கு சமாதானம் பேச வரும்படி அழைத்தனர். அதன்படி போதையில் இருந்த செல்வக்குமார் சமாதானம் பேச பூங்காவுக்கு சென்றார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது கூட்டாளியான அலெக்ஸ் ஆகியோர் கையில் இருந்த கத்தியால் செல்வக்குமாரின் முகத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் கண், வாய் என முகம் முழுவதும் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் அவரது மர்ம உறுப்பையும் அறுத்தனர்.

செல்வக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார், உயிருக்கு போராடிய செல்வக்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கொலையான செல்வக்குமார், ரீனாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தபோது, வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு என் பொண்டாட்டிதான் என ‘ரீல்ஸ்’ வெளியிட்டிருந்தார். இந்த சூழலில் அவருடன் பழகி வந்த ரீனா மற்றும் அவரது தோழி ரஜிதா இருவரும், ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பல வாலிபர்களுக்கு காதல் வலை விரித்து, அவர்களிடம் பணம் பறித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த செல்வக்குமார், இதுபற்றி தட்டிக்கேட்டதால் 2 பெண்களும் சேர்ந்து நண்பர்கள் உதவியுடன் அவரை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்