ரங்காபானி-நாகர்கோவில் இடையே இன்று முதல் வந்தே பாரத் ரெயில்

மேற்குவங்க மாநிலம் ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.;

Update:2026-01-17 09:59 IST

திருப்பூர்,

நாடு முழுவதும் ரெயில் பயணத்தை விரைவு படுத்தும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்குவங்கம் ரங்காபானி-நாகர்கோவில் (வண்டி எண்.02603) இடையே வந்தே பாரத் ரெயில் இன்று (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

அதன்படி மேற்குவங்கம் ரங்காபானி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.56 மணிக்கு வந்து செல்லும். இந்த ரெயில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலை இரவு 7.15 மணிக்கு சென்றடையும். மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.  


Tags:    

மேலும் செய்திகள்