குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்கு தெரியும்.. மு.க.ஸ்டாலின்
மத்திய - மாநில உரிமைகளை வலுப்படுத்த, குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பசியால் வாடித் தவிக்கும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியும். அதனையும் டெல்லியில் இருக்கும் யாரோ ஒருவர் தீர்மானித்தால், அந்தத் தாய் பொங்கி எழுவாள்!
மாநில உரிமைகளைக் காக்கவும், மத்திய - மாநில உரிமைகளை வலுப்படுத்துவதற்கான கூறுகளை ஆராய்ந்திடவும் இன்று குழு அமைத்திருக்கிறோம்.
அந்தக் குழு அளித்திடும் பரிந்துரைகளைச் செயல்படுத்திட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.