திருச்செந்தூரில் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது
கடல் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்படுகிறது.;
திருச்செந்தூர்,
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அவ்வப்போது கடல் உள்வாங்குவது வழக்கம். அமாவாசை பௌர்ணமி நாட்களில் அதிக தூரத்திற்கு கடல் உள்வாங்கும். இந்நிலையில் இன்று திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா கோவில் அருகே சுமார் 50 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்படுகிறது. இந்த பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பாறைகளின் இடுக்கிற்க்குள் தேங்கிய கடல்நீரில் இருக்கும் சிறிய மீன்களை சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் மீன்கள் பிடித்து மகிழ்ந்தனர்.