திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 1.59 கோடி

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 28 நாட்களில் ரூ. 1.59 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.;

Update:2025-02-25 08:51 IST

அறுபடை வீடுகளில் ஒன்றாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர். இந்த காணிக்கை அவ்வப்போது எண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், கடந்த 28 நாட்களில் 1 கோடியே 59 லட்ச ரூபாய் பணம், 921 கிராம் தங்கம், 11 ஆயிரத்து 12 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்