தூத்துக்குடி: கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான தூத்துக்குடி, செயின்ட்மேரிஸ் காலனியைச் சேர்ந்த அருள்வளவன் மகன் சாம்டேவிட் (வயது 20) என்பவரை நேற்று (21.5.2025) வடபாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.