திருவள்ளூர்: தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழந்த லாரி
தறுமாறாக ஓடிய லாரி 2 மின்கம்பங்கள் மீது மோதியதுடன் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிப்பட்டு பகுதியில் தேவையான மண்ணை கொண்டு வருவதற்காக டிப்பர் லாரிகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை 4 மணி அளவில் காலி டிப்பர் லாரி பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறுமாறாக ஓடிய லாரி 2 மின்கம்பங்கள் மீது மோதியதுடன் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் மின்கம்பங்களும் விழுந்தது. பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.