தக்காளி விலை திடீர் உயர்வு.! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
க்காளியின் விலை தற்போது ஆப்பிளுக்கு இணையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது திருப்பூர் மற்றும் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளில் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் பனிப்பொழிவால் மகசூல் குறைந்துள்ளதால், விலை உயர்ந்தும் தங்களுக்கு பலனில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெளியூர் வியாபாரிகள் உடுமலை சந்தைக்கு அதிக அளவில் வந்து கொள்முதலை தொடங்கினால், விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. எல்லா சீசனிலும் தக்காளிக்கு சீரான விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.
தாம்பரம் - ராமேசுவரம் இடையே நாளை சிறப்பு ரெயில்
திருச்சி வழியாக தாம்பரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
அரையாண்டு விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக இன்றும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் முதற்கட்டமாக டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. அதேபோல, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக இன்றும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.