இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025
x
தினத்தந்தி 28 Dec 2025 9:27 AM IST (Updated: 28 Dec 2025 11:16 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 28 Dec 2025 11:16 AM IST

    திருவண்ணாமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், அரையாண்டு விடுமுறை என்பதாலும், திருவண்ணாமலை கோவிலில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.  

  • 28 Dec 2025 10:33 AM IST

    அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

    ”'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்; ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.”

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 28 Dec 2025 10:17 AM IST

    விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

  • 28 Dec 2025 10:15 AM IST

    விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்

  • 28 Dec 2025 10:13 AM IST

    நீலகிரியில் வனப்பகுதியையொட்டிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு;

    புத்தாண்டையொட்டி அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பது, வாண வேடிக்கை நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

  • 28 Dec 2025 10:11 AM IST

    கோவை ஆத்துப்பாலம்-உக்கடம் சந்திப்பு மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

  • 28 Dec 2025 10:07 AM IST

    விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மரியாதை

  • 28 Dec 2025 9:36 AM IST

    தக்காளி விலை திடீர் உயர்வு.! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    க்காளியின் விலை தற்போது ஆப்பிளுக்கு இணையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது திருப்பூர் மற்றும் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளில் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் பனிப்பொழிவால் மகசூல் குறைந்துள்ளதால், விலை உயர்ந்தும் தங்களுக்கு பலனில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

    வெளியூர் வியாபாரிகள் உடுமலை சந்தைக்கு அதிக அளவில் வந்து கொள்முதலை தொடங்கினால், விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. எல்லா சீசனிலும் தக்காளிக்கு சீரான விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.

  • 28 Dec 2025 9:31 AM IST

    தாம்பரம் - ராமேசுவரம் இடையே நாளை சிறப்பு ரெயில்

    திருச்சி வழியாக தாம்பரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

  • 28 Dec 2025 9:29 AM IST

    விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

    அரையாண்டு விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story