இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025

Update:2025-12-31 10:00 IST
Live Updates - Page 4
2025-12-31 04:41 GMT

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2025-12-31 04:38 GMT

தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது; ஆனால்.... துரை வைகோ பேட்டி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. கணிசமான வாக்குகள் பிரியும். தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான் என்று விஜய் கூறுவது அவருடைய ஜனநாயக உரிமை. ஆனால் எங்களை பொறுத்தவரை மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவரது வருகையால், தி.மு.க. கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று துரை வைகோ கூறியுள்ளார்.

2025-12-31 04:31 GMT

தங்கம் விலை மேலும் குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்