சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழபு - போர்மேன் கைது
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் போர்மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோகுலேஸ் பட்டாசு ஆலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தீக்காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பல கிலோ மீட்டர் தூரம் புகை மண்டலம் தெரிந்ததால் பரபரப்பு நிலவியது.
இளைஞர் மரணம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் கடிதம்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் லாக்கப் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது நேரடி கண்காணிப்பில் உயர் மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த லாக்கப் மரணங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்க வேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதி உள்ளார்.
தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.9,020-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி 1 கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
4-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்புவனம் இளைஞர் மரணம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
டிஜிபி அலுவகலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் மரணம் வழக்கு கு.எண்:303/2025 கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்து 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு மேலும் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஷம்
பெண்களின் திருமண கனவு நிறைவேறும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் பலவழிகளில் வந்து சேரும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். தேகம் பளிச்சிடும். உணவு விசயத்தில் கவனம் தேவை. வெளியே செல்லும் முன் வாகனத்தில் உங்கள் ஆவணங்களையும் சரிபார்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா