வண்டலூர் அருகே அதிர்ச்சி.. 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரில் வண்டலூர் மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
"மாரீசன்" படத்தின் கதை இதுவா?.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு 'மாமன்னன்' படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து 'மாரீசன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய எம்.ஐ. நியூயார்க்
167 ரன் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் களம் புகுந்த எம்.ஐ. நியூயார்க் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் எம்.ஐ. நியூயார்க் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எம்.ஐ. நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக பூரன் 52 ரன் எடுத்தார். நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் வாஷிங்டன் பிரீடம் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோத உள்ளன.
குரூப் 4 தேர்வு: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு - தேர்வர்கள் வாக்குவாதம்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் கூறி தேர்வு அறைக்குள் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன்படி ஆம்பூர், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தேர்வு எழுத அனுமதிக்காததை எதிர்த்து தேர்வர்கள் சிலர் வாக்குவாதம் செய்ததாகவும், சில இடங்களில் சாலைமறியல் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிபணியிடம்: 3,900
தேர்வெழுதுவோர் எண்ணிக்கை: 13.83 லட்சம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை. குரூப் 4 தேர்வு வினாத்தாள், விடைத்தாள் அனைத்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
காலை 8.30 மணி அளவில் வேலைக்கு சென்ற கைதிகளின் விவரத்தை கணக்கெடுத்தபோது. ராஜேந்திரன் மட்டும் அங்கு இல்லை. அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. உடனே சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறை நிர்வாகம் தரப்பில் கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்
செம்மங்குப்பம் ரெயில்வே கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. இதன்படி கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை (LC-170) திறந்தே வைத்திருந்தது உறுதியாகி உள்ளது.
அன்று காலை 6:45 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த கேட் திறந்து இருந்தபோது சென்றுள்ளதும் புலனாய்வு விசாரணையில் வெளிவந்துள்ளது.
புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம்
மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G, 4G என அதிகரித்து. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் டி20 கிரிக்கெட்: கடைசி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற 4 டி20 ஆட்டங்களில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.
மீண்டும் 73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.