இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

Update:2025-09-19 09:20 IST
Live Updates - Page 6
2025-09-19 04:47 GMT

அமராவதி அணையில் இன்று நீர் திறப்பு


நீர் திறப்பு காரணமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



2025-09-19 04:44 GMT

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் வெண்கலம் வென்று அசத்தல்


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில், வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரெனை (சுவீடன்) சந்தித்தார்.


2025-09-19 04:43 GMT

சூர்யகுமார் யாதவை விலங்குடன் ஒப்பிட்டு விமர்சித்த விவகாரம்: பாக்.முன்னாள் வீரரை விளாசிய மதன் லால்


பாக்.முன்னாள் வீரர் முகமது யூசுப்பின் கருத்து முற்றிலும் முட்டாள்தனமானது என்று இந்திய முன்னாள் வீரரான மதன் லால் விளாசியுள்ளார்.

2025-09-19 04:41 GMT

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!


நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய திரையுலக பிரபலங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.92 கோடியளவில் வருமான வரி செலுத்தியுள்ளார். 2-வது இடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் உள்ளார். அவர் இந்த நிதியாண்டில் ரூ.80 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.


2025-09-19 04:39 GMT

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி


திரை பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


2025-09-19 04:38 GMT

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி


சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


2025-09-19 04:36 GMT

கால்பந்து தரவரிசை: முதலிடத்தை இழந்த அர்ஜென்டினா


சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் நம்பர் 1 இடத்தில் இருந்த அர்ஜென்டினா 2 இடங்கள் சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


2025-09-19 04:34 GMT

அந்த காரணத்தினால்தான் எனக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை - குல்தீப் யாதவ்


இங்கிலாந்தில் தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்வாய் என்று கம்பீர் தம்மிடம் ஆரம்பத்திலேயே தெரிவித்து விட்டதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.


2025-09-19 04:30 GMT

மீண்டும் இணையுமா 'மதராஸி' பட கூட்டணி?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் புதிய படம் இயக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது.


2025-09-19 04:29 GMT

நடிகர் விஜய் வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்


சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்