பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1 சதவீதம் பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி மற்றும் அயன் சிங்கம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
அரேபிய நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை பின்பற்றும் ஜாக் கமிட்டி இஸ்லாமியர்கள் மதுரை, சென்னை, கோவை, தென்காசியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 30) சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் வழக்கம்போல் இருக்கும் என்றும்,வரும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் மெட்ரோ வாட்டர் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ளநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதன் தொடர்ச்சியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
எனினும், நள்ளிரவிலேயே குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இதனால், அரும்பாக்கத்தில் போக்குவரத்து மீண்டும் சீரானது.