இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 March 2025 3:36 PM IST
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே காமாக்யா விரைவு ரெயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மாங்குலி என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டதில் 25 பேர் காயமடைந்தனர்.
- 30 March 2025 3:35 PM IST
கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 600க்கும் மேற்பட்ட உலமாக்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
- 30 March 2025 3:02 PM IST
தி.மலை மாவட்டம் ஆரணி அருகே வீடு புகுந்து பெண் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசீ தேடி வருகின்றனர்.
- 30 March 2025 1:59 PM IST
பெங்களூருரிலிருந்து குவாஹத்தி சென்ற காமாக்யா விரைவு ரெயிலின் 2 பெட்டிகள், ஒடிசா மாநிலம் கட்டாக்கி அருகே உள்ள மாங்குலி என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
- 30 March 2025 1:42 PM IST
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தொடக்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 30 March 2025 1:40 PM IST
நத்தமாடிபட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் விக்ரம் - நடிகை துஷாரா விஜயன் பார்வையிட்டனர்.
- 30 March 2025 1:38 PM IST
திண்டுக்கல்லில் 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின், கயிறு கட்டி காளையை மீட்டனர்.