சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 7ம் தேதி 3.45 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.
கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடியில் வேலை என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
குஜராத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
வக்பு சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது
ஏப்.2 முதல் 5 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.2,750 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
திரிணாமுல் காங்கிரசார் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் பல்வேறு விவகாரங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
கோவையில் நூலகம் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அவையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.