சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில், காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவன் ஆகாஷ் (19), தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.
கணவன்-மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து இருவரும் தங்கியிருந்த நிலையில் ஓரே வாரத்தில் விபரீத முடிவு.
தகவல் அறிந்து ஐசிஎஃப் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை.
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயராது: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று பேருந்து கட்டணம் உயர்வதாக வெளியாகும் செய்தி தவறானது என்றும் பேருந்து கட்டணம் உயராது என்பதால்தான் தனியார் பேருந்து சங்கத்தினர் நீதிமன்றம் சென்றுள்ளனர் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசின் விதிமுறை செல்லும்
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் மக்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் பயந்து போயிருக்கலாம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியது எதிர்பார்த்ததுதான். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்து இருக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓடும் ரயிலில் ரீல்ஸ் - இளம்பெண் ஜாமினில் விடுவிப்பு
ரயிலில் கதவுக்கு வெளியே தொங்கியபடி இளம்பெண் ரீல்ஸ் வைரலான நிலையில், ஷகிலா பானுவை விசாரணைக்குஅழைத்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணைக்கு வராமல் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் கைது செய்தனர் பின்னர் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.