இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
x
தினத்தந்தி 3 Jun 2025 8:59 AM IST (Updated: 7 Jun 2025 8:31 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • சென்னையில் கனமழை
    3 Jun 2025 7:19 PM IST

    சென்னையில் கனமழை

    சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

  • ஐபிஎல் இறுதிப்போட்டி- பஞ்சாப் பந்துவீச்சு
    3 Jun 2025 7:04 PM IST

    ஐபிஎல் இறுதிப்போட்டி- பஞ்சாப் பந்துவீச்சு

    ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு இந்தாண்டு வரலாறு படைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை
    3 Jun 2025 6:18 PM IST

    மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை

    மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொதுநல மனுவின் மீது நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

  • 3 Jun 2025 6:10 PM IST

    "வாங்க... வந்து பன் பண்ணுங்க... ஜாலியா விளையாடுங்க. நான் உங்கள பார்த்துட்டே இருப்பேன்... கோப்பையை வீட்டுக்கு கொண்டு வாங்க" 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியை காண அகமதாபாத் வந்தடைந்த ஏபி டி வில்லியர்ஸ், நண்பர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை பெற்று கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்கம்
    3 Jun 2025 5:34 PM IST

    பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை பெற்று கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்கம்

    பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

  • உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது
    3 Jun 2025 5:09 PM IST

    உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது

    நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் கோயில் மற்றும் அருவிக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தொடர்ந்த பொதுநல வழக்கில் மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

  • 3 Jun 2025 5:01 PM IST

    சென்னை திரும்பிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த திமுகவினர். பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியா சார்பில் கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்தது.

  • மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி
    3 Jun 2025 4:16 PM IST

    மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி

    பிளைட் மோடில் இருந்த செல்பேசியை ஆன் செய்தபோது ஞானசேகரன் முதலில் காவல் அதிகாரியிடம் பேசினார். அடுத்த ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் அடிக்கடி பேசினார். இந்த சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தொடர்பில் இருப்பவர்.அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டது ஏன்? தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

  • கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பார் - டி.கே.சிவக்குமார்
    3 Jun 2025 3:25 PM IST

    கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பார் - டி.கே.சிவக்குமார்

    "நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பார், கர்நாடக மக்கள் ஜனநாயக அடிப்படையில் போராட அனைத்து உரிமையும் உண்டு. இந்த விஷயத்தை வைத்து ஜாதி, மதம் என்ற வேறுபாடுகளை காட்ட முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

  • கனமழை பாதிப்பு - கேட்டறிந்த பிரதமர்
    3 Jun 2025 2:30 PM IST

    கனமழை பாதிப்பு - கேட்டறிந்த பிரதமர்

    வடகிழக்கு மாநில​ங்களில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. அசாம், சிக்கிம் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார். கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

1 More update

Next Story