இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025

Update:2025-06-05 11:23 IST
Live Updates - Page 2
2025-06-05 06:21 GMT

"சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு நாம் தான் தீர்வு"

"சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது, நாட்டிலே தமிழகத்தில் தான் அதிக ராம்சர் இடங்கள் உள்ளது.

புதிதாக அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது, நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம்" - உலக சுற்றுச்சூழல்

தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

2025-06-05 06:19 GMT

ராமதாஸை சமாதானப்படுத்த முயற்சி?

வரும் 8 ஆம் தேதி அமித்ஷா தமிழ்நாடு வரவுள்ள சூழலில், ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ம.க.வில் நிலவும் விரிசலால் பாஜக அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜக உடனான கூட்டணியை ராமதாஸ் விரும்பாத நிலையில், அவரை இணைக்க பாஜக சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2025-06-05 05:55 GMT

  • மேலும் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
  • நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்- மத்திய சுகாதாரத்துறை

Tags:    

மேலும் செய்திகள்