இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-06-05 11:23 IST


Live Updates
2025-06-05 14:14 GMT

ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்து.. 7 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ ரிக்‌ஷா மீது கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். ஆட்டோவில் வந்தவர்கள், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் நீராடிவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.

2025-06-05 13:27 GMT

அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த மாதம் தற்காலிக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பரஸ்பர வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்ட, அடுத்தகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை நின்றுபோனது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

2025-06-05 12:24 GMT

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து தோல்வி

இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார். 

2025-06-05 10:45 GMT

பெங்களூரு நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த ஆர்சிபி

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

2025-06-05 10:39 GMT

வேல்முருகனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசிய கருத்துக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் விஜய்யை ‘அண்ணா’ என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு மட்டுமே, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

2025-06-05 09:51 GMT

காசா முனையில் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு

ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் உள்ள பிணைக் கைதிகளில் 2 பேரின் உடல்கள் காசா முனையில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜூடி வெயின்ஸ்டின் ஹகாய்(வயது 70) மற்றும் அவரது கணவர் காடி ஹகாய்(வயது 72) ஆகிய இருவரின் உடல்கள் கான் யூனிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-06-05 08:04 GMT

நீண்ட கால நண்பர் என்ற முறையில் ராமதாஸை சந்தித்தேன்; வேறு எதுவும் இல்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். ராமதாஸை சமாதானப்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், நட்பு ரீதியாகவே சந்தித்து இருப்பதாக ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கமளித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்