தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி
தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்தில் உள்ளது. கையெழுத்தேனும் தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று அவர் கேட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 23 முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் ராமேசுவரத்தில் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி மக்கள் முன் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இன்று ராம நவமி நாள். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கடவுள் ராமருக்கு, சூரியனின் கதிர்கள் சூரிய திலகம் வைத்துள்ளது. சமயநெறி சார்ந்த ராமேசுவரம் நிலத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
பா.ஜ.க. நிறுவன நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, 1997-ம் ஆண்டு டெல்லி மேயராக பணியாற்றிய கட்சியின் மூத்த தொண்டரான சகுந்தலா ஆர்யா (வயது 98) என்பவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்
தமிழகத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். அவர் எப்போதும் பல்வேறு திட்டங்களை கொடுப்பதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளார்.
10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். தமிழ் மொழி, பண்பாட்டிற்காக அவர் பணியாற்றி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசினார்.
புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இபிஎஸ் முடிவெடுப்பார் காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
டெல்லி வாஸிராபாத் பகுதியில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.
தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் 9 தொகுதிகளை பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக, ராமேஸ்வரம் மண்டபத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமரிடம், ஹெலிபேடில் வைத்து கம்பராமாயணத்தை வழங்கியுள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி.
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்த பின் இன்று ராம நவமியையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.