வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சந்திப்புக்கு வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் மட்டும் எம்.பி. என்ற முறையில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்கிறார். மதுரை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்களை மோடி சந்திக்கிறார்.
பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம்: விழுப்புரம் கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15ம் தேதிக்குள்ளாக அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதற்கென தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு : காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வருகை தருவதாக கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெயில் தாக்கத்தால் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நீர் மோர் வழங்கப்படுகிறது. மேலும், சுற்றுப் பிரகாரங்களில் அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15ம் தேதிக்குள்ளாக அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை. இதற்கென ( தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் செல்லும் நிலையில், தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ராமேசுவரத்திற்கு காரில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.