2025-10-06 04:42 GMT
அதிரடி உயர்வு.. ரூ.11 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்.!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளிவிலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2025-10-06 04:10 GMT
அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு - அரசு பரிசீலனை
- கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் எதிரொலி
- அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க அரசு பரிசீலனை
- "அரசியல் கூட்டங்களில் பெண்களுக்கு தனி இடம், விதி மீறினால் நிகழ்ச்சி ரத்து"
- "அரசியல் கூட்டத்தில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்க தடை"
- "கூட்டத்தில் உயிரிழப்பு நடந்தால் ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு"
- "கூட்டத்திற்கு பின் குப்பைகளை கட்சியினரே சுத்தம் செய்ய வேண்டும்"
- "காலி இடங்களில் மட்டுமே அரசியல் கூட்டம், சாலைகளில் அனுமதி இல்லை"
- "பொதுக்கூட்டம் - சில மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே மக்கள் அனுமதி"
- அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவு
- அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு - மக்களிடம் கருத்து கேட்கவும் முடிவு
- தேர்தலுக்கு முன் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு திட்டம்
- அரசியல் கூட்டத்தில் இனி ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது - அரசு திட்டவட்டம்