இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Oct 2025 7:31 PM IST
கேரள லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம்
பம்பர் குலுக்கலில் முதல் பரிசு பெற்றுள்ள அந்த பெண் அதிர்ஷ்டத்தை நம்புபவர் இல்லை என்றும் சாலையில் நடந்து சென்ற அவர் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை பரபரப்பாக நடப்பதை பார்த்து கடைக்கு வந்து டிக்கெட் வாங்கினார் எனவும் டிக்கெட் முகவர் லத்தீஷ் தெரிவித்துள்ளார். கடைசியாக அதிர்ஷ்டத்தை நம்பாத அந்த பெண்ணுக்கே பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ரூ.25கோடி விழுந்துள்ளது.
- 6 Oct 2025 7:28 PM IST
எங்கும் போகல - திரும்பிய சிங்கம்
வண்டலூரில் மாயமானதாக கூறப்பட்ட சிங்கம் எங்கு விடப்பட்டதோ, அதே இடத்திற்கு திரும்பியது. லயன் சபாரி பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், மாலை உணவுக்காக தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 6 Oct 2025 7:27 PM IST
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி - திருமாவளவன் கண்டனம்
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி செருப்பை வீசியுள்ளார் சனாதன எண்ணம் கொண்ட வழக்கறிஞர். தலைமை நீதிபதியை தாக்க முயன்றவரின் வழக்கறிஞர் தகுதியை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒட்டுமொத்த நீதித்துறைக்கே இது அவமானமாகும். சனாதனத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- 6 Oct 2025 7:25 PM IST
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் நேரம் மாற்றம்
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6.05 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் நிலையில். டிச - 7ஆம் தேதி முதல் காலை 6 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 Oct 2025 7:23 PM IST
ராமதாஸை நேரில் நலம் விசாரித்த ஈபிஎஸ்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
- 6 Oct 2025 6:22 PM IST
வரும் 16-ந் தேதி முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 14,268 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்ல ஏற்கனவே 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தேவையை சமாளிக்க, கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் 300 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
- 6 Oct 2025 5:36 PM IST
வைகோ, ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் சீமான்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து சீமான் நலம் விசாரித்தார்.
- 6 Oct 2025 5:07 PM IST
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.175 உயர்ந்து ரூ.11,125க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை காலையில் ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.520 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1,400 உயர்ந்து ரூ.89 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்து சவரன் ரூ.89,000 ஆக விற்பனை ஆகிறது.
- 6 Oct 2025 4:59 PM IST
பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல்
பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல்
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக வரும் நவம்பர் 6, 11ம் தேதிகளில் வாக்குப்பதிவும், நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 6 Oct 2025 4:34 PM IST
பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.















