இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 07-12-2025

Update:2025-12-07 09:12 IST
Live Updates - Page 2
2025-12-07 06:22 GMT

இயல்பை விட கூடுதல் மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இயல்பான காலகட்டத்தில் 383.2 மிமீ மழை பெய்யும் நிலையில், இன்று வரை 417.3 மிமீ மழை பெய்துள்ளத என்று தெரிவித்துள்ளது.

2025-12-07 05:34 GMT

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மதுரையில் இன்று  முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 'தமிழகம் வளர்கிறது' எனும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலுாரில், 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடக்கும் விழாவில், 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை, முதல்வர் வழங்குகிறார்.

2025-12-07 04:56 GMT

மதுரையில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார் சுமார் 950 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட பாலத்தால் மதுரை தொண்டி சாலை, கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் வாகன ஒட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2025-12-07 03:48 GMT

6 ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ரோ வாட்டர் கட்டணம் உயர்வு

சென்னையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணத்தை 6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் உயர்த்தியுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கு முன்பதிவு மூலம் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் 6,000 லி குடிநீர் ரூ.735ல் இருந்து ரூ.1,025 ஆகவும், 9,000 லி குடிநீர் ரூ.1,050ல் இருந்து ரூ.1,535ஆகவும் உயர்வு. உற்பத்தி, லாரி வாடகை உயர்வால் கட்டண உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-07 03:45 GMT

100 இண்டிகோ விமானங்கள் ரத்து

6வது நாளாக தொடரும் இண்டிகோ விமான சேவை முடக்கத்தால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இண்டிகோ விமானங்கள் ரத்து ஆகியுள்ளன. டிக்கெட் பணம் ஒரு வாரத்திற்குள் திருப்பி வழங்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்