இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025

Update:2025-02-11 09:18 IST
Live Updates - Page 3
2025-02-11 04:45 GMT

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் அமைச்சர் காந்தி ஊழல் செய்துள்ளதாக, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது காந்தி சிறை செல்வார் என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார்.

2025-02-11 04:08 GMT

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 ஜெட் விமானங்கள் மோதி விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

2025-02-11 03:59 GMT

மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய் பாதிப்புக்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

48 நோயாளிகள் ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு உள்ளனர். 21 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 91 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

2025-02-11 03:53 GMT

பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மதுரை - பழனி இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்