குஜராத்தில் யோகா பயிற்சி முகாம்
சர்வதேச யோகா தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யோகா நிகழ்வுகளில் பங்கேற்போர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் ஏராளமானோர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மாநில மந்திரிகளும் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜேஷ்டா பூர்ணிமாவை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பால ராமரை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.