இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

Update:2025-03-12 09:53 IST
Live Updates - Page 6
2025-03-12 04:40 GMT

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று (மார்சு 12) கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

2025-03-12 04:39 GMT

மற்ற மொழிகளுக்கு எதிரியல்ல,மொழியை திணித்தால் தான் நாங்கள் எதிரி என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

2025-03-12 04:37 GMT

ஆந்திர மாநிலம் சித்தூரில் வியாபாரி வீட்டிற்குள் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். 2 துப்பாக்கிகள், குண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-03-12 04:34 GMT

உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானத்தை அமைக்க மான்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமையவுள்ளது. இங்கிலாந்தில் ஏற்கெனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை விஞ்சும் அளவில் அமைக்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்