இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 March 2025 8:00 PM IST
மூத்த பா.ஜ.க. தலைவர் அத்வானியை டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- 12 March 2025 7:52 PM IST
30 நாள் போரை நிறுத்த சொன்ன அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த நிலையில், உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் உளவுத்துறை உதவிகளை மீண்டும் அமெரிக்கா வழங்க தொடங்கியுள்ளது.
- 12 March 2025 7:43 PM IST
தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 12 March 2025 7:41 PM IST
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டு பாக்கியை 3 வாரங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
- 12 March 2025 6:36 PM IST
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தமிழக பள்ளிகளுக்கு நிதியை வழங்காமல் மிரட்டுவது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக நீதி எனும் இடஒதுக்கீட்டை தேசிய கல்வி கொள்கை ஏற்கவில்லை என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
- 12 March 2025 6:31 PM IST
த.வெ.க. தலைவர் விஜய் மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களை நாளை காலை 11 மணியளவில் சந்தித்து பொறுப்புகளை வழங்குவார் என தகவல் தெரிவிக்கின்றது.
- 12 March 2025 6:16 PM IST
ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதற்காக, திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. தொழிலாளர்கள் பலரும் ஒரே நேரத்தில் ரெயில் நிலையத்தில் குவிந்ததில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
- 12 March 2025 5:48 PM IST
தீவு நாடான மொரீசியஸில் மேற்கொண்ட பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, அவர் இந்தியாவுக்கு புறப்பட்டு உள்ளார்.
- 12 March 2025 5:45 PM IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இந்திய வீரர் சுப்மன் கில்லும், 3-வது இடத்தில் ரோகித் சர்மாவும், 5-வது இடத்தில் விராட் கோலியும், 8-வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் உள்ளனர்.
- 12 March 2025 5:36 PM IST
திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.






