இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

Update:2025-06-12 08:01 IST
Live Updates - Page 5
2025-06-12 03:52 GMT

நவீனமயமாக்கப்படும் மந்தைவெளி பேருந்து முனையம்

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.

கோபுரம்-ஏ:

* இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 184-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.

* தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை வணிக / அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன.

கோபுரம்-பி:

* இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.

* தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை சில்லறை விற்பனை இடங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன.

2025-06-12 03:42 GMT

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது ஏன்? - வைரமுத்து

ராமர் என்பது ஒரு தொன்மம். அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நம்பிக்கையே அடிப்படை. கீழடியின் தொன்மைக்கு அறிவியலே அடிப்படை.

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? தொன்மத்துக்கு ஒரு நீதி. தொன்மைக்கு ஒரு நீதியா?

என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார்.

2025-06-12 03:37 GMT

விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் 'ஜனநாயகன்' பட ஸ்பெஷல் அப்டேட்


ஜன நாயகன் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை விஜய்யின் பிறந்தநாளான வருகிற ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


2025-06-12 03:34 GMT

பா.ம.க. பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு

பா.ம.க.-வின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வந்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48), தலையில் காயங்களுடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார்.

சடலமாக சக்கரவர்த்தி மீட்கப்பட்ட நிலையில், அது கொலையா? அல்லது சாலை விபத்தா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025-06-12 03:25 GMT

தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை


சரக்கு கப்பலில் தற்போது தீ கட்டுக்குள் வந்தபோதும் மீண்டும் கரும்புகை எழுந்த வண்ணம் உள்ளது. தீயை கட்டுப்படுத்திய நிலையில் விபத்து ஏற்பட்ட கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


2025-06-12 02:49 GMT

சென்டிரல் - விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் சென்டிரல் மெட்ரோ - பரங்கிமலை செல்லும் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக தொழில்நுட்பக் கோளாறால் நேற்று மாலை சென்னை சென்டிரல் கோயம்பேடு - விமான நிலையம் வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

2025-06-12 02:44 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

2025-06-12 02:39 GMT

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

2025-06-12 02:35 GMT

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


2025-06-12 02:34 GMT

மேட்டூர் அணை இன்று திறப்பு; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்


இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். அதற்காக மேட்டூர் அணை பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவுகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்